Tuesday, March 16, 2010

பெண் காதல்


உன் நினைவைச்சுமந்து

உயிர் கசியும் இரவின் தருணங்களில்

ஒரு நிமிஷமேனும்

என் கனவில் வந்து போ...

அந்த சந்தேஷத்தில்

இரவேடு கரைந்து

நானும் இறந்து போகிறேன்

மின்னொளியில் மோதி மோதி

மாய்ந்து போகும் விட்டிய் போல...

நாளை...

உனக்காகவே ஒருத்தி

உயிரைக் கையில் பிடித்துக்கொண்டு

கால் கடுக்க காத்திருந்தாள் –என்று

தெரிந்தவர்கள் சொல்வார்கள்..

பென் காதல் என்பதால்

நான் உன்னால்

புறக்கணிக்கப்பட்டமை குறித்து

ஒருவரும் அலட்டிக்கொள்ளப் போவதில்லை..


இதுவே,

உன் காதலை

நான் நிராகரித்திருப்பின்

உலகமே சேர்ந்து –என்னை

குற்றவாளிக்கூண்டில் நிறுத்தியிருக்கும்..

ஷகீல் 20100315

Tuesday, March 9, 2010

அவமானம்


அவமானம்

நான் இதயமாய் இருந்தபோது

நீ சுவாசமாய் உள் நுழைந்தாய்..

என்

சிற்றைகள் எல்லாம்

சுற்றிப் பார்த்தாய்,,

உறுதியாய் இருக்கிறதாவென

தட்டிப் பார்த்தாய்

கடைசியில்,

ஒரு

இளம் கலைஞனை விமர்சிக்கும்

பெருமை பிடித்த எழுத்தாளன் பேல

சில அவதா(மா)னங்கள் சொன்னாய்..

அந்த நிமிஷமே

உனக்கு பதில் சொல்ல துடித்தேன்

உதடுகள் துடித்தபோதும்

உள்ளம் தடுத்தது

அதிகாரத்தின் முன்னால்

அவமானப்படுதப்படும்

அப்பாவி மனிதன் போல..

07032010

Saturday, February 27, 2010


உறவின் முகம்??

இலைமேல் விழுந்து

அரைநொடிக்குள் மறைந்து போகின்ற

மழைத்துளி தருகின்ற மகிழ்ச்சி போல்..

பூமிக்கு வந்து

மறுகனமே மரணித்துப்போன ஒரு

மழலையின் முகமாய்..

சில நிமிஷங்களே வாழ்ந்து

நம்மை சந்தோஷிக்கச்செய்து போகும்

வானவில்லின் வர்ணங்கள் போல..

அடிமட்டக் குடிகாரனுக்கு

வாழ்க்கைப்பட்ட பாவத்திற்காய்

காலம் முழுவதும் கண்ணீர் விடும் ஒரு

அப்பாவி மனைவியை போல..

எட்டு நாள் மட்டுமே

ஊரெங்கும் சுற்றி திரிந்துவிட்டு

சத்தமின்றி செத்துப் போகும்

அழகான பட்டாம் பூச்சி போல..

உலகில் உள்ள உறவுகளுக்கும்

எத்தனை முகம்கள்?

எத்தனை குணங்கள்?

எத்தனை நிறங்கள்?

ஒவ்வொரு முகத்தின் சிரிப்புக்குப் பின்னாலும்

சொல்லிக்கொள்ளாத ஒரு சோகம்,

வர்ணிக்க முடியாத ஒரு வலி,

வெளிப்படுத்தாத ஒரு வேதனை இருக்கிறது..

எல்லாம் நினைத்து அழுகின்ற போது

கடைசியில்,

கண்ணோடு உறவாடும் கண்ணீர் கூட

சில நொடிகளில்

காய்ந்துகாணாமல் தான் போகிறது.

.20100226